உயிரிழந்த பெண் குடும்பத்துக்கு ரூ. 4 லட்சம் நிவாரணம்

0பார்த்தது
உயிரிழந்த பெண் குடும்பத்துக்கு ரூ. 4 லட்சம் நிவாரணம்
பாபநாசம் வட்டம் அம்மாப் பள்ளி தைக்காலைச் சேர்ந்த மதினா பேகம் (55) நேற்று முன் தினம் வீட்டின் எதிரே உள்ள இலவம்பஞ்சு மரத்தில் இருந்து பஞ்சு சேகரிக்கும் போது, சூறைக்காற்று வீசியதில் மரக்கிளை முறிந்து அவர் மீது விழுந்து உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து அறிந்த சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான், மதினா பேகம் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி, முதல்வரின் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ. 4 லட்சம் நிவாரணத் தொகைக்கான காசோலையை வழங்கினார்.

தொடர்புடைய செய்தி