தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை முதல் காலவரையற்ற
வேலை நிறுத்தப்
போராட்டம் தொடங்கியது. காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஊராட்சி செயலாளர்களுக்கு அரசு ஓய்வூதியத் திட்டம் மற்றும் விடுப்பு உரிமைகளை வழங்க வேண்டும், பணி மேற்பார்வையாளர்களை இளநிலை பொறியாளர்களாக தரம் உயர்த்த வேண்டும், பெரிய ஊராட்சி ஒன்றியங்களை இரண்டாகப் பிரிக்க வேண்டும் உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப்
போராட்டம் நடைபெறுகிறது. மாநில இணைச் செயலாளர் ஸ்ரீமகேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த
வேலை நிறுத்தத்தால், ஊராட்சி ஒன்றிய அலுவலகப் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டு அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.