சேதுபாவாசத்திரம்: கடைமடையில் மழையால் நீர்மட்டம் உயர்வு

75பார்த்தது
சேதுபாவாசத்திரம்: கடைமடையில் மழையால் நீர்மட்டம் உயர்வு
தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் கடைமடைப் பகுதியில் மூன்று மாதங்களாக மழை இல்லாததாலும், அக்னி நட்சத்திர வெயிலின் தாக்கத்தாலும் ஏரி, குளங்கள் வற்றி, நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக மேகமூட்டத்துடன் காணப்பட்ட வானம், நேற்று முன்தினம் முதல் பரவலாகக் கோடை மழையைப் பொழிந்துள்ளது. இந்த மழையால் வெயிலின் தாக்கம் குறைந்து, நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்ததால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி