பேராவூரணி அரசு கல்லூரியில் இன்று முதல் மாணவா் சோ்க்கை

79பார்த்தது
பேராவூரணி அரசு கல்லூரியில் இன்று முதல் மாணவா் சோ்க்கை
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி கலைக் கல்லூரியில் ஜூன் 2 முதல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடங்குகிறது. இது குறித்து கல்லூரி முதல்வர் (பொ) சி. ராணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 2025-26-ஆம் கல்வி ஆண்டுக்கான இளநிலை பட்டப்படிப்பிற்கான, முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு ஜூன் 2 மற்றும் 3 ஆம் தேதி காலை 9 மணி முதல், சிறப்பு ஒதுக்கீடு பிரிவுக்கு நடைபெற உள்ளது.

 ஜூன் 4-ஆம் தேதி இளங்கலை பிரிவுகளுக்கும், ஜூன் 5 ஆம் தேதி இளம் அறிவியல் பிரிவுக்கும் நடைபெற உள்ளது. இரண்டாம் கட்ட கலந்தாய்வு: ஜூன் 12 ஆம் தேதியன்று அனைத்து கலை பிரிவுகளுக்கும், ஜூன் 13 ஆம் தேதியன்று அனைத்து அறிவியல் பாடப்பிரிவுகளுக்கும் நடைபெற உள்ளது. கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தின் நகல், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் அசல் மற்றும் நகல், +1 மற்றும் +2 வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் அசல் மற்றும் நகல் (தலைமை ஆசிரியர் சான்றுடன்), பள்ளி மாற்றுச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ்,

 சிறப்பு ஒதுக்கீட்டிற்கான சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-4, வங்கி சேமிப்பு கணக்கு புத்தக நகல், ஆதார் அட்டை அசல் மற்றும் நகல் ஆகியவற்றுடன் வர வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்டு சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு சேர்க்கை உறுதிக்கு பிறகே கல்வி கட்டணம் செலுத்த அறிவுறுத்தப்படும் என தெரிவித்துள்ளாா்.

தொடர்புடைய செய்தி