தஞ்சாவூர்: 377 கி. மீ தொலைவுக்கு வாய்க்கால்கள் தூர்வார முடிவு

82பார்த்தது
தஞ்சாவூர்: 377 கி. மீ தொலைவுக்கு வாய்க்கால்கள் தூர்வார முடிவு
தஞ்சாவூர் மாவட்டத்தில் கடைமடை விவசாயிகளுக்குப் பாசன நீர் சென்றடையவும், பயிர்ச் சேதத்தைத் தவிர்க்கவும் 377 கி. மீ. தொலைவிற்கு 'சி' மற்றும் 'டி' பிரிவு வாய்க்கால்களைத் தூர் வார இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவதை முன்னிட்டு, வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் இப்பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், இதுவரை 62 கி. மீ. பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி