வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மணிக்கு 65 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால், பேராவூரணி, சேதுபாவாசத்திரம் பகுதிகளில் சனிக்கிழமை காலை முதல் பரவலாக மழை பெய்து வருவதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை தெரிவித்துள்ளது. சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகப் பகுதிகளில் உள்ள 155 விசைப் படகுகள் மற்றும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளின் உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சுமார் 10 ஆயிரம் மீனவர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.