தஞ்சை தொல்காப்பியர் சதுக்கம் அருகே உள்ள ரயில்வே மேம்பாலத்தில் மின் விளக்குகள் கடந்த சில மாதங்களாக எரியாததால், இருள் சூழ்ந்துள்ளது. இதனால் மாரியம்மன்கோயில், கும்பகோணம், திருவையாறு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. இருசக்கர வாகன ஓட்டிகள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளும் நிலையும் ஏற்படுகிறது. எனவே, மின் கம்பங்களில் விளக்குகளைப் பொருத்தி ஒளிரச் செய்ய அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.