தஞ்சாவூர்: மாரியம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா தொடக்கம்

66பார்த்தது
தஞ்சாவூர்: மாரியம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா தொடக்கம்
தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா விக்னேஸ்வர பூஜையுடன் திங்கள்கிழமை தொடங்கியது. இக்கோயிலில் 2004-ஆம் ஆண்டுக்குப் பிறகு, கடந்த ஓராண்டாக திருப்பணிகள் செய்யப்பட்டு, பிப்ரவரி 10-ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது. இதையொட்டி, இக்கோயிலில் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, தனபூஜை, மகா கணபதி ஹோமம் உள்ளிட்ட பூஜைகளுடன் இவ்விழா திங்கள்கிழமை காலை தொடங்கியது. 

தொடர்ந்து, நாள்தோறும் பல்வேறு பூஜைகள் நடைபெறவுள்ளன. பிப்ரவரி 7-ஆம் தேதி மாலை யாகபூஜைகள் தொடங்குகின்றன. தொடர்ந்து, 8-ஆம் தேதி காலை இரண்டாம் கால யாகபூஜையும், மாலை மூன்றாம் கால யாகபூஜையும், 9-ஆம் தேதி காலை நான்காம் கால யாகபூஜையும், மாலை 5-ஆம் கால யாகபூஜையும் நடைபெறவுள்ளன. பிப்ரவரி 10-ஆம் தேதி காலை ஆறாம் கால யாகபூஜையும், காலை 9.45 மணியிலிருந்து 10 மணிக்குள் மகா குடமுழுக்கும் நடைபெறவுள்ளன. ஏற்பாடுகளை அரண்மனை தேவஸ்தான நிர்வாகிகள், விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you