பேராவூரணி அருகே காலகம் பகுதியில் உள்ள நியாய விலை கடையில், பொங்கல் சிறப்புத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அசோக் குமார் தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தின் கீழ், 3000 ரூபாய் பணம், அரிசி, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. சட்டமன்ற உறுப்பினர் வருகையின்போது, பெண்கள் அவரை உற்சாகமாக வரவேற்றனர்.