பேராவூரணி அருகே பூக்கொல்லையைச் சேர்ந்த ராஜ்மோகன் (39) என்பவர், செவ்வாய்க்கிழமை இரவு தனது சகோதரியின் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றபோது, காலகம் - ஆவுடையார்கோவில் சாலையில் நெல் மூட்டைகளுடன் வந்த லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து தகவலறிந்து சென்ற போலீசார் உடலை மீட்டு பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.