
தஞ்சை மாவட்டத்தில் பரவலாக மழை: விவசாயிகள் மகிழ்ச்சி
தஞ்சாவூர் மாவட்டத்தில் சுமார் ஒரு வார இடைவெளிக்குப் பிறகு, ஞாயிற்றுக்கிழமை மாலை பலத்த இடி, மின்னலுடன் பரவலாக மழை பெய்தது. இன்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், பாபநாசம் 18 மி.மீ., தஞ்சாவூர் 16 மி.மீ., அய்யம்பேட்டை 15 மி.மீ. என பல்வேறு பகுதிகளில் மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக பாபநாசத்தில் 18 மி.மீ. மழை பதிவானது. இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.






































