தஞ்சாவூர் மாவட்டத்தில் 104 வேட்பு மனுக்கள் ஏற்பு

4பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டத்தில் 104 வேட்பு மனுக்கள் ஏற்பு
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளில் தாக்கல் செய்யப்பட்ட 211 வேட்புமனுக்களில், செவ்வாய்க்கிழமை பரிசீலனைக்குப் பிறகு 104 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. திருவிடைமருதுார் தொகுதியில் 17, கும்பகோணத்தில் 14, பாபநாசத்தில் 13, திருவையாறில் 15, தஞ்சாவூரில் 12, ஒரத்தநாட்டில் 9, பட்டுகோட்டையில் 12, பேராவணியில் 12 என மொத்தம் 104 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் வியாழக்கிழமை ஆகும்.

தொடர்புடைய செய்தி