தமிழகத்தில் மார்ச்-ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு
முடிவுகள் இன்று (மே 20) வெளியிடப்பட்டன. தஞ்சை மாவட்டத்தில் 408 பள்ளிகளைச் சேர்ந்த 29,618 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 28,851 பேர் தேர்ச்சி பெற்று, 97.41% தேர்ச்சியுடன் மாநில அளவில் 3-வது இடத்தைப் பிடித்து தஞ்சை மாவட்டம் சாதனை படைத்துள்ளது. மேலும், மாவட்டத்தில் உள்ள 230 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன.