ஒன்றிய அரசின் ஆன்லைன் மருந்து விற்பனைக் கொள்கையைக் கண்டித்தும், புதிய விதிகளைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் அகில இந்திய மருந்து வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில் நாடு தழுவிய ஒரு நாள் அடையாள மருந்துக் கடைகள் அடைப்புப்
போராட்டம் நேற்று நடைபெற்றது. இதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் சில்லறை மற்றும் கார்ப்பரேட் சங்கிலித் தொடர் மருந்துக் கடைகள் மூடப்பட்டன. தஞ்சை மாவட்டத்தில் மட்டும் சுமார் 1,150 கடைகள் அடைக்கப்பட்டன. ஆன்லைன் விற்பனையால் போலி மருந்துகள் அதிகரிக்கும், இளைஞர்கள் தவறாகப் பயன்படுத்துவர், வணிகர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என மாவட்டச் செயலாளர் சோலை சிவம் தெரிவித்தார்.