சென்னையிலிருந்து சரக்கு ரயில் மூலம் 1,228 டன் யூரியா உரம் திங்கள்கிழமை தஞ்சாவூருக்கு வந்து சேர்ந்தது. தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடி முழுவீச்சில் நடைபெற்று வருவதால், விவசாயிகளுக்குத் தேவையான உரங்கள் வரவழைக்கப்பட்டு தனியார் மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலம் விநியோகிக்கப்படுகின்றன. வந்த உர மூட்டைகள் லாரிகள் மூலம் தனியார் கடைகளுக்கு அனுப்பப்பட்டன.