விவசாயப் பணிகளுக்காக 1, 300 டன் உரம் தஞ்சை வந்தது

0பார்த்தது
விவசாயப் பணிகளுக்காக 1, 300 டன் உரம் தஞ்சை வந்தது
தஞ்சை மாவட்டத்தில் குறுவை அறுவடை முடிந்து சம்பா, தாளடி நடவு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த சாகுபடிக்கு தேவையான உரங்கள், விதைகள் மற்றும் இடுபொருட்கள் வரவழைக்கப்பட்டு இருப்பு வைக்கப்பட்டு தனியார் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், நேற்று (15 ஆம் தேதி) சென்னையில் இருந்து சரக்கு ரயிலில் 1300 மெட்ரிக் டன் யூரியா உரங்கள் தஞ்சைக்கு வந்து இறங்கியது. பின்னர், உர மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் விற்பனை கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி