தஞ்சாவூர் கிழக்கு, மேற்கு, தெற்கு, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் குத்தாலம், கந்தர்வக்கோட்டை காவல் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் அடையாளம் தெரியாத மற்றும் உரிமை கோரப்படாத 16 ஆண்கள், 2 பெண்கள் சடலங்கள் இன்று தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் மருத்துவக் கல்லூரி காவல் நிலையம் சார்பில் தஞ்சாவூர் வடக்கு வாசல் ராஜகுமாரி இடுகாட்டில் இறுதி மரியாதை செய்யப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டன. இந்த சம்பவம் தஞ்சை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.