இறைச்சி கடைக்காரா் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேருக்கு சிறை

0பார்த்தது
இறைச்சி கடைக்காரா் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேருக்கு சிறை
தஞ்சாவூா் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி மீன் கொட்டகை தெருவில் 2021, அக்டோபா் 5 ஆம் தேதி இறைச்சிக் கடை நடத்தி வந்த எஸ். செல்வம் (45) அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கில் ஆனந்தகிருஷ்ணன் (23), நாகராஜன் (23) ஆகியோருக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், தலா ரூ. 1, 000 அபராதமும் விதித்து தஞ்சாவூா் முதலாவது கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பு வழங்கியது. இளங்கோவன் ஏற்கெனவே இறந்துவிட்டாா். 17 வயதுடைய மற்றொரு குற்றவாளிக்கு இளைஞா் நீதி குழுமத்தால் தண்டனை வழங்கப்பட்டது. திறம்பட பணியாற்றிய அரசு வழக்குரைஞா் மற்றும் காவல் துறையினரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பாராட்டினாா்.

தொடர்புடைய செய்தி