செங்கிப்பட்டி அருகே 335 கிலோ புகையிலை பொருள் பறிமுதல்

0பார்த்தது
செங்கிப்பட்டி அருகே 335 கிலோ புகையிலை பொருள் பறிமுதல்
தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே புதுக்குடி சோதனைச் சாவடியில் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது, பெங்களூரிலிருந்து கும்பகோணத்திற்கு காரில் கடத்தி வரப்பட்ட 334.450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக, புகையிலையைக் கடத்தி வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஹர்சன்குமார் (26) மற்றும் மேஷாராம் (27) ஆகிய இருவரை செங்கிப்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி