தஞ்சாவூரில் தெருநாய்கள் தாக்கி 6 ஆடுகள் பலி, அதிர்ச்சி

0பார்த்தது
தஞ்சாவூர் அடுத்த ராமநாதபுரம் தெற்கு மூப்பனார் தெருவைச் சேர்ந்த விவசாயி சரவணன் வீட்டில் வளர்த்து வந்த 6 ஆடுகளை, வெள்ளிக்கிழமை இரவு கொல்லையில் அடைத்து வைத்திருந்தபோது, சனிக்கிழமை அதிகாலை கூட்டமாக வந்த தெரு நாய்கள் தாக்கி கொன்றுவிட்டன. சுமார் 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தெருநாய் தொல்லையால் பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் அவதிப்படுவதாகவும், பாதிக்கப்பட்ட விவசாயிக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி