தஞ்சாவூரில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் திருடு போனது தொடர்பாக, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடாசலம் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். இதில், தஞ்சாவூர் அருகே வரகூரைச் சேர்ந்த ஆதிகேசவன் (21) மற்றும் அரவிந்த் (24) ஆகிய இருவரை காவல் துறையினர் புதன்கிழமை கைது செய்தனர். அவர்களிடமிருந்து திருட்டு வழக்குகளில் தொடர்புடைய 7 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.