தஞ்சாவூர் மாரியம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்த 53 வயது மளிகை கடை உரிமையாளர் கோபி, இன்று காலை தனது இருசக்கர வாகனத்தில் சாலையைக் கடக்கும்போது திருவாரூரிலிருந்து வந்த கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தாலுக்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிவகாசியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் திருமுருகனைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.