தஞ்சாவூர் மேரிஸ் கார்னர் பகுதியில் உள்ள கே.எப்.சி. உணவகத்தில் ஏசி கேஸ் நிரப்பும் பணியின் போது சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 6 பேர் காயமடைந்தனர். தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஊழியர் ரவிராஜ் உயிரிழந்தார். போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி பணியில் ஈடுபட்டதே விபத்துக்குக் காரணம் என கூறப்படுகிறது.