பட்டுக்கோட்டை அருகே கரம்பயத்தைச் சேர்ந்த விவசாயி குழந்தைவேல் என்பவரின் 3 ஏக்கர் நிலத்தில் அறுவடைக்குத் தயாராக இருந்த எள், உளுந்து பயிர்களைச் சிலர் டிராக்டர் ஏற்றி முழுமையாக அழித்துள்ளனர். இதுகுறித்து திருவோணம் போலீசார் நடவடிக்கை எடுக்காததால், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், சேத மதிப்பு ரூ. 1. 35 லட்சத்தைப் பெற்றுத் தர வலியுறுத்தியும் தஞ்சை கலெக்டர் மற்றும் எஸ்பியிடம் அவர் புகார் மனு அளித்துள்ளார்.