தஞ்சாவூர் மாவட்டம் தென்னமநாடு பகுதியை சேர்ந்த டிராக்டர் ஸ்பேர் பார்ட்ஸ் கடை உரிமையாளர் கதிர்வேல் (50), இன்று மதியம் யாகப்பாச்சாவடி அருகே சாலைப்பணி காரணமாக மெதுவாக சென்றுகொண்டிருந்தபோது, தஞ்சாவூரில் இருந்து பட்டுக்கோட்டை நோக்கி வேகமாக வந்த தனியார் பஸ் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய பஸ் டிரைவர் தப்பி ஓடினார். உயிரிழந்த கதிர்வேலின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள், தனியார் பஸ் கண்ணாடிகளை உடைத்து, சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒன்றரை மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.