தஞ்சாவூா் அருகே தளவாய்ப்பாளையம் புஷ்பம் நகரைச் சேர்ந்த கார் ஓட்டுநர் எஸ். வெங்கடேஷ் (49), தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்துக்கு திங்கள்கிழமை வந்து, ஆட்சியரின் வாகன நிறுத்துமிடம் முன் கேனில் கொண்டு வந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றிக் கொண்டார். பொது இடத்தில் மது அருந்தியதாகக் கூறி தாலுகா காவல் நிலைய போலீஸார் தன்னைத் தடுத்ததாகவும், வாக்குவாதம் செய்ததாகவும், பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் வெங்கடேஷ் மீது கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் தற்கொலைக்கு முயன்றதாகத் தெரியவந்துள்ளது. இதையடுத்து, காவல் துறையினரை மிரட்டி, பணி செய்ய விடாமல் தடுத்தது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார்.