மத்திய அரசு உர விலையைக் குறைக்க வலியுறுத்தல்

1பார்த்தது
மத்திய அரசு உர விலையைக் குறைக்க வலியுறுத்தல்
மத்திய அரசு உர விலையை உயர்த்தியிருப்பது விவசாயிகளுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி, கூடுதல் சுமையை ஏற்றியுள்ளது என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தஞ்சாவூர் தெற்கு மாவட்டத் தலைவர் ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். விதைகள் தட்டுப்பாடு, தொழிலாளர் பற்றாக்குறை, பருவம் தவறிய மழை மற்றும் குறைந்தபட்ச ஆதார விலைக்கான போராட்டங்கள் என ஏற்கனவே பல்வேறு துயரங்களைச் சந்தித்து வரும் லட்சக்கணக்கான விவசாயிகள் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, விவசாயிகளின் மன உணர்வுகளைப் புரிந்து கொண்டு, உயர்த்தப்பட்ட உர விலையை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி