சென்னை: மியூசிக் அகாடமியில் கர்நாடக இசை பட்டயப் படிப்பு

400பார்த்தது
சென்னை: மியூசிக் அகாடமியில் கர்நாடக இசை பட்டயப் படிப்பு
சென்னை மியூசிக் அகாதெமியின் 3 ஆண்டு கர்நாடக இசை பட்டயப் படிப்பிற்கு (அட்வான்ஸ் டிப்ளமோ) ஜூன் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். பிளஸ் 2 முடித்த, 18 முதல் 30 வயதுக்குட்பட்ட, வர்ணம், கீர்த்தனை மற்றும் மனோதர்மம் தெரிந்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். வார நாட்களில் காலை நேர வகுப்புகளாக நடைபெறும் இந்தப் படிப்பின் முடிவில் கச்சேரிகள் நிகழ்த்த வேண்டும். விருப்பமுள்ளவர்கள் www.musicacademymadras.in இணையதளத்தில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்பலாம். கூடுதல் விவரங்களுக்கு 044-28112231 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி