ஈரான் மீதான தாக்குதலை கண்டித்து சிஐடியு ஆர்ப்பாட்டம்

4பார்த்தது
ஈரான் மீதான தாக்குதலை கண்டித்து சிஐடியு ஆர்ப்பாட்டம்
தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகில் இன்று மாலை சி. ஐ. டி. யு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு மாநிலச் செயலாளர் சி. ஜெயபால் தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில், ஈரான் மீதான தாக்குதலை அமெரிக்கா, இஸ்ரேல் கைவிடக்கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அமெரிக்க அதிபர், இஸ்ரேல் பிரதமர் ஆகியோரின் உருவப்படங்களை தீ வைத்து எரித்து எதிர்ப்பை தெரிவித்தனர். ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி