தஞ்சாவூரில் துணிகரம்: வீட்டில் நகை, பணம் கொள்ளை

3பார்த்தது
தஞ்சாவூரில் துணிகரம்: வீட்டில் நகை, பணம் கொள்ளை
தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே அரசு மருத்துவமனை தற்காலிக ஊழியர் இளங்கோவன் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து, 11 கிராம் தங்க மோதிரங்கள் மற்றும் 22 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். கடந்த 28-ஆம் தேதி குடும்பத்தினர் வெளியே சென்றிருந்த நேரத்தில் இந்தத் துணிகரத் திருட்டு நடைபெற்றுள்ளது. இதுகுறித்து செங்கிப்பட்டி காவல்துறையினர் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி