தஞ்சாவூர் மாவட்டத்தில் சன்ன நெல் ரகங்களை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மாநில அளவிலான பயிர் விளைச்சல் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்திலேயே அதிக மகசூல் பெறும் விவசாயிக்கு சி. நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருதுடன் ரூ. 5 லட்சம் ரொக்கப்பரிசு, ரூ. 11,000 மதிப்புள்ள தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளிப் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். குறைந்தபட்சம் 2 ஏக்கரில் சாகுபடி செய்துள்ள நில உரிமையாளர்கள் அல்லது குத்தகைதாரர்கள் ரூ. 150 பதிவுக்கட்டணம் செலுத்தி இதில் பங்கேற்கலாம்.