மேகேதாட்டு அணையை முற்றுகையிட தஞ்சாவூரில் இருந்து புறப்பாடு

0பார்த்தது
மேகேதாட்டு அணையை முற்றுகையிட தஞ்சாவூரில் இருந்து புறப்பாடு
கர்நாடக அரசு மேகேதாட்டு பகுதியில் அணை கட்டுவதைக் கண்டித்தும், உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழகத்திற்கு மாதாந்திர நீரைப் பகிர்ந்தளிக்க வலியுறுத்தியும் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் நாளை (மே 31) மேகேதாட்டு பகுதியில் முற்றுகைப் போராட்டம் நடத்த உள்ளனர். இதற்காக இன்று காலை தஞ்சை பெரிய கோவில் முன்புள்ள ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து, நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் வாகனப் பேரணியாகப் புறப்பட்டனர். இப்பேரணி திருச்சி, சேலம், தர்மபுரி வழியாக ஓசூர் சென்றடைந்து, அங்கிருந்து நாளை மேகேதாட்டு பகுதியைச் சென்றடைய உள்ளது.

தொடர்புடைய செய்தி