தஞ்சையில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

2பார்த்தது
தஞ்சையில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
தஞ்சை பனகல் கட்டிட வளாகத்தில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 100 நாள் வேலைத் திட்டத்தின் பெயர் மாற்றத்தைக் கண்டித்தும், மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பைப் பறிக்கும் ஒன்றிய அரசின் புதிய சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. கோடைகால நிவாரண நிதி வழங்கிய தமிழக அரசிற்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மாவட்டச் செயலாளர் பி. எம். இளங்கோவன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் தலைமையில் நடைபெற்ற இதில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி