தஞ்சையில் உயிரைப் பறித்த ஊசி; மருந்துக் கடை உரிமையாளர் கைது

740பார்த்தது
தஞ்சையில் உயிரைப் பறித்த ஊசி; மருந்துக் கடை உரிமையாளர் கைது
தஞ்சாவூர் விளார் சாலை கலைஞர் நகரைச் சேர்ந்தமிழரசன் (25), வயிற்று வலியால் அவதிப்பட்டார். உறவினர்கள் அவரை மனோகரன் என்பவருக்குச் சொந்தமான மருந்துக் கடைக்கு அழைத்துச் சென்றனர். மனோகரன், உரிய மருத்துவ அனுமதி இன்றி ஊசி போட்டதில், தமிழரசன் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய சில நிமிடங்களிலேயே நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்தார். இதுகுறித்து தஞ்சாவூர் தாலுகா போலீஸார் மனோகரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஊசி செலுத்தியதே உயிரிழப்புக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி