தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய வீரபாண்டியன், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்ப்பதாகத் தெரிவித்தார். இது தொடர்பாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர்களின் குரலுக்கு மதிப்பளித்தும், பல்வேறு கட்சிகளின் வேண்டுகோளுக்கிணங்கவும் மத்திய அரசு இந்த திருத்தத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் குரல் ஆர்எஸ்எஸ் குரலாக மாறி வருவது அதிர்ச்சியளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வளரும் கட்சியான தங்களுக்கு கூடுதல் இடங்களை ஒதுக்கீடு செய்யுமாறு தமிழக முதல்வரிடம் கேட்போம் என்றும் வீரபாண்டியன் தெரிவித்தார்.