தஞ்சாவூரில் வணிகர் சங்க பேரவை நிர்வாகிகள் தேர்வு

71பார்த்தது
தஞ்சாவூரில் வணிகர் சங்க பேரவை நிர்வாகிகள் தேர்வு
தஞ்சாவூர் மாவட்ட வணிகர் சங்க பேரவையின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தஞ்சாவூரில் நேற்று நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்ட வணிகர் சங்க பேரவை கூட்டமைப்பு நிறுவனர் தலைவர் ராஜா சீனிவாசன் தலைமை வகித்தார். இதில், வணிகர் சங்க பேரவையின் தலைவராக கே. ஜி. வெங்கடேஷ், செயலாளராக ஆர். கணேஷ், பொருளாளராக ஆர். ராஜன் மற்றும் துணைத் தலைவர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

கூட்டத்தில், ஜிஎஸ்டி விதிப்பால் பாதிக்கப்படும் மக்கள் மீது மத்திய, மாநில அரசுகள் அக்கறை கொள்ள வேண்டும். கொடிமரத்துமூலையில், மீன் மொத்த வியாபார மார்க்கெட் தொடங்கினால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், மீன் கழிவுகளை அகழியில் கொட்டுவதால் சுகாதார சீர்கேடும் ஏற்படும். எனவே, மீன் மொத்த வியாபார மார்க்கெட்டை நகரத்துக்கு வெளியே அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்தி