தஞ்சையில் மின் சிக்கன வார விழிப்புணர்வு ஊர்வலம்

61பார்த்தது
தஞ்சையில் மின் சிக்கன வார விழிப்புணர்வு ஊர்வலம்
தஞ்சாவூர் மின் பகிர்மான வட்டம் சார்பில் மின் சிக்கன வார விழா கடந்த 17ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதன் ஒரு பகுதியாக நேற்று மின் சிக்கன வார விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. தஞ்சை மணிமண்டபம் அருகே மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் இருந்து ஊர்வலம் தொடங்கியது. மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் நளினி தலைமை வகித்தார். திருச்சி மண்டல தலைமை பொறியாளர் கிருஷ்ணவேணி கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

இதில் ஏராளமான மின்வாரிய அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டு மின் சக்தி சிக்கனம் தேவை இக்கணம், குமிழ் விளக்கை மறுத்து குழல் விளக்கை பொருத்த வேண்டும். சூரிய ஒளி மின்சக்தியை பயன்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி சென்றனர். ஊர்வலம் ராமநாதன் ரவுண்டானா மேரிஸ் கார்னர் கீழ் பாலம் வழியாக ரயில்வே நிலையத்தை வந்தடைந்தது. நிறைவில் செயற்பொறியாளர் விமலா நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்தி