தஞ்சையில் 5-வது நாளாக ஊழியர்கள் போராட்டம்

387பார்த்தது
தஞ்சையில் 5-வது நாளாக ஊழியர்கள் போராட்டம்
தஞ்சை பனகல் கட்டிடம் முன்பாக தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 5-வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் நாவலரசன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் ஏராளமான பணியாளர்கள் கலந்துகொண்டனர். சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், துறையில் காலியாக உள்ள 60,000-க்கும் மேற்பட்ட பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், அரசுப் பணி நியமனங்களில் தகுதியுள்ள ஊழியர்களுக்கு 50% இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும், ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி மற்றும் மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும் ஆகிய முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது. தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி