விவசாயிகள் வேளாண் அடுக்ககத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தல்

594பார்த்தது
விவசாயிகள் வேளாண் அடுக்ககத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தல்
தஞ்சாவூர் மாவட்டம் குருவாடிபட்டி கிராமத்தில் வேளாண் அடுக்ககப் பதிவு குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். வேளாண் இணை இயக்குனர் வித்யா கூறுகையில், விவசாயிகள் உடனடியாகத் தங்கள் நில விவரங்களை வேளாண் அடுக்ககத் திட்டத்தில் பதிவு செய்ய வேண்டும். தவறினால், எதிர்காலத்தில் கூட்டுறவு மற்றும் தனியார் கடைகளில் ரசாயன உரங்களைப் பெறுவதிலும், பயிர் காப்பீட்டுக்கான பிரீமியம் தொகையைச் செலுத்துவதிலும் சிக்கல் ஏற்படும். விவசாயிகள் சிட்டா, அடையாள ஆவண நகல், கைபேசி எண்ணுடன் வேளாண் உதவி இயக்குனர் அலுவலகம் அல்லது இ-சேவை மையங்களை அணுகி இலவசமாகப் பதியலாம்.

தொடர்புடைய செய்தி