டெல்டா பாசனத்திற்காக ஆண்டுதோறும் ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்படும் மேட்டூர் அணை, இந்த ஆண்டு கர்நாடக அரசு உரிய தண்ணீரைத் திறக்காததால் திறக்கப்பட வாய்ப்பில்லை என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அணையில் போதிய நீர் இருப்பு இல்லை. மேலும், கல்லணையில் மராமத்துப் பணிகளும் தொடங்கப்படாததால், குறுவை சாகுபடி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழக முதல்வர் ச. ஜோசப்
விஜய் அவர்கள் தலையிட்டு ஜூன் 12-ஆம் தேதியே மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்டா பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.