தஞ்சையில் விவசாயிகள் சங்கத்தினர் பெருந்திரள் தர்ணா போராட்டம்

0பார்த்தது
தஞ்சையில் விவசாயிகள் சங்கத்தினர் பெருந்திரள் தர்ணா போராட்டம்
ஒன்றிய பாஜக அரசின் கார்ப்பரேட் ஆதரவு மற்றும் வேளாண் விரோதக் கொள்கைகளைக் கண்டித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தஞ்சாவூரில் புதன்கிழமை பிரம்மாண்ட தர்ணா போராட்டம் நடைபெற்றது. மாநிலப் பொதுச் செயலாளர் சாமி. நடராஜன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், தஞ்சை, திருவாரூர், நாகை, திருச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர். விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை சட்டம், விவசாயக் கடன் தள்ளுபடி, மின்சார திருத்தச் சட்டம் 2025 மற்றும் புதிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும், விளைநிலங்களைக் கையகப்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும், காவிரி டெல்டாவில் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.