தஞ்சாவூர் கீழவாசலில் முகமது இஸ்மாயில் என்பவருக்கு சொந்தமான துணிக்கடை நேற்று இரவு தீப்பிடித்து எரிந்தது. அதிகாலை கடையிலிருந்து புகை வந்ததை கண்ட பொதுமக்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். எனினும், கடை முழுவதும் எரிந்து பல லட்சம் மதிப்பிலான துணிமணிகள் சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.