தஞ்சையில் சோழர் அருங்காட்சியகத்திற்கு அடிக்கல் நாட்டு விழா

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் ரூ. 56.41 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள மாபெரும் சோழர் அருங்காட்சியகத்திற்கு, பிப்ரவரி 13-ம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். முதலில் நகரின் ஒரு பகுதியில் திட்டமிடப்பட்ட இந்த அருங்காட்சியகம், போதிய இடவசதி கருதி தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் 52 ஏக்கர் பரப்பளவிற்கு மாற்றப்பட்டுள்ளது. சோழர் காலத்துக் கல்வெட்டுகள், சிற்பங்கள், செப்பேடுகள், நீர்ப்பாசன மேலாண்மை மற்றும் பண்பாட்டு வரலாற்றுச் சின்னங்கள் அடங்கிய கலைக்களஞ்சியமாக இது உருவாக்கப்பட உள்ளது. குஜராத்தின் படேல் சிலையைப் போல, இங்கு மாமன்னர் ராஜராஜ சோழனுக்கு 120 அடி உயரத்தில் பிரம்மாண்ட உலோகச் சிலை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. சோழர்களின் பெருமையை உலகறியச் செய்யும் வகையில், தொல்லியல் துறை மூலம் இப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
