தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகம் இணைந்து, கல்வெட்டியல், பனை சுவடியியல், அரிய க
ையெழுத்துச் சுவடிகள் படிப்புகளுக்கான குறுகிய கால இலவசப் பயிற்சிகளை வரும் பிப். 16 ஆம் தேதி முதல் வழங்குகிறது. 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 18 முதல் 35 வயதுடைய ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். 360 மணி நேரப் பயிற்சியின் போது, அரசின் விதிமுறைகளின்படி ரூ. 12,000 உதவித்தொகை வழங்கப்படும். பயிற்சி பெற விரும்புவோர் மாவட்ட திறன் அலுவலர் (8072773419) அல்லது ஓலைச்சுவடித் துறை தலைவர் (9442207782) அவர்களை பிப். 15, 2026-க்குள் தொடர்பு கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.