தஞ்சாவூர் மாவட்டத்தில் பொது வேலை நிறுத்தம் - மறியல்

0பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டத்தில் பொது வேலை நிறுத்தம் - மறியல்
மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் விவசாயிகள் விரோத கொள்கைகளைக் கண்டித்து தஞ்சாவூர் மாவட்டத்தில் 7 இடங்களில் வியாழக்கிழமை தொழிற்சங்கங்கள் நடத்திய மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 1,500 பேர் கைது செய்யப்பட்டனர். தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்புகளைத் திரும்பப் பெற வேண்டும், வரைவு விதை சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும், குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும், மின்சார மற்றும் மோட்டார் வாகன திருத்தச் சட்டங்களைக் கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு தொழிற்சங்க மற்றும் விவசாயிகள் சங்கத் தலைவர்கள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி