தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்ட மாநகர அரசுப் பேருந்து, மேரிஸ் கார்னர் அருகே ஸ்டேரிங் லாக் ஆனதால் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் நின்றுகொண்டிருந்த நான்கு பேர் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்தவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து
போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.