அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்

0பார்த்தது
அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்
தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கலைக்கல்லூரி முன்பு தமிழ்நாடு அரசு கலைக்கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் நலச்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பல்கலைக்கழக மானியக்குழு அறிவுறுத்தியபடி ரூ. 57,800 ஊதியம் வழங்க வேண்டும், உறுப்பு கல்லூரி விரிவுரையாளர்களுக்கு பிடித்தம் செய்யப்பட்ட பி.எஃப், இ.எஃப். போன்றவற்றை அனைத்து அரசு கல்லூரி விரிவுரையாளர்களுக்கும் வழங்க வேண்டும், மகப்பேறு விடுப்பு அளிக்க வேண்டும், ஓய்வு பெற்றவர்களுக்கு ரூ. 25 லட்சம் பணிக்கொடை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் காலவரையற்ற பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக விரிவுரையாளர்கள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி