கும்பகோணம் தாராசுரம் காய்கறி மார்க்கெட்டில் கோடை வெயில் காரணமாக மிளகாய் வரத்து குறைந்துள்ளது. இதனால், கடந்த வாரம் ஒரு கிலோ பச்சை மிளகாய் 35 ரூபாய்க்கு விற்ற நிலையில், தற்போது 50 ரூபாயாக விலை உயர்ந்துள்ளது. காலநிலை மாற்றத்தால் காய்கறிகள் வீணாவதால் விலை நிலையற்றதாக இருப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.