தஞ்சையில் அறுவடை மும்மரம்: மகசூல் குறைவால் விவசாயிகள் வேதனை

346பார்த்தது
தஞ்சையில் அறுவடை மும்மரம்: மகசூல் குறைவால் விவசாயிகள் வேதனை
தஞ்சாவூர் மாவட்டம் நாஞ்சிக்கோட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் ஆழ்குழாய் கிணறு மூலம் சாகுபடி செய்யப்பட்ட 110 நாள் வயதுடைய கோடை நெல் அறுவடை இயந்திரங்கள் மூலம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அறுவடை செய்யப்படும் நெல்மணிகள் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. கடந்த ஆண்டு ஏக்கருக்கு 40-50 மூட்டைகள் கிடைத்த மகசூல், தற்போது 25-30 மூட்டைகளாகக் குறைந்துள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். அறுவடை செய்த நெல்லை உடனுக்குடன் அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி