தஞ்சை: கௌரவ விரிவுரையாளர்கள் முற்றுகை.. எம்.பி., மேயர் கார் சிறைபிடிப்பு

723பார்த்தது
தஞ்சை: கௌரவ விரிவுரையாளர்கள் முற்றுகை.. எம்.பி., மேயர் கார் சிறைபிடிப்பு
தஞ்சையில் ஐந்து நாட்களாக யுஜிசி ஊதியத்தை வலியுறுத்தி கௌரவ விரிவுரையாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், தஞ்சை குந்தவை நாச்சியார் கலை கல்லூரிக்கு விலையில்லா மடிக்கணினி வழங்க வந்த தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி மற்றும் தஞ்சாவூர் மேயர் சண்.இராமநாதன் ஆகியோரின் கார், பேராசிரியர்களால் முற்றுகையிடப்பட்டது. திமுக நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தஞ்சாவூர் மேயரை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி